புயல் வருமே

பூவிரி சோலையில் பொன்னந்தி மாலையில் புன்னகைத்துக்
காவிரி ஆற்றங் கரையினில் காதல் கவிவரைந்தே
ஓவியம் போல உளத்தில் நிறைந்தவன் ஊடலுற்றால்
பூவையின் நெஞ்சம் பொறுமை யிழக்கப் புயல்வருமே !

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-Mar-20, 1:33 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
Tanglish : puyal varume
பார்வை : 182

மேலே