கொடூர நோய்க்கிருமி கொரோனா -2019

இறுதியாண்டு பேர்கொண்டு
இருபதாம் நூற்றாண்டில் போர்கொள்ளும்
கொடுரனே !
சுட்டெரிக்கும் சூரியனை விட
உன்னால் சுகாதாரம் இழக்கிறோம்,
சூழ்நிலை காரணமாக்கி என்னை
சூழ்ந்து கொண்டு ஆட்டிப்படைக்கிறாய்,
என் கை , வாய், நாசி என
உட்புகுந்து நுரையீரல்
சுவாசம் தடை கொண்டாய் ,
எங்களால் எல்லை தாண்ட முடியவில்லை
நீமட்டும் எல்லையில்லா
எண்ணிக்கையில்லா தூரம் கடந்தாய்,
ஏதோ கைவலி, உடல்வலி
இருமல், தும்மல் என்றிந்தோம்
உணர்த்திவிட்டாய் ஊழ்வினை ,
இடைவெளி வேண்டும் அரசு
அறிவுறுத்தல் உன்னுள் அல்ல எம்முள்,
ஊரடங்கு உத்தரவு வந்தாலும்
உன்வருகை அதிகரிப்பே ,
நாங்கள் ஆதரிக்கவில்லை உன்னை
அழுகுரல் எங்கும் -இங்கு
அறிவியலும் மங்கும்
உணர்த்திவிட்டாய் ஊழ்வினை ,
உலக நாடுகள் கட்டுக்குள் வர
கர்மவினை காட்டிவிட்டாய் ,
தொட்டவுடன் தொற்றிக்கொண்டாய்
தொடும் தூரம் நீட்டிக்கொண்டாய் ,
கொடூர நோய்க்கிருமி (கொரோனா)
என்றழைத்தோம்,
உணர்தோம் மதம் தாண்டி
மனிதம் நிலைக்க,
தந்துகொடுத்திருக்கிறாய் பாடம்
மதங்கள் நீங்கி மனிதம் நிலைக்க,
இனியாவது மனிதம் நிலைக்கட்டும் !

எழுதியவர் : ச. சோலைராஜ் (24-Mar-20, 7:32 am)
சேர்த்தது : ச சோலை ராஜ்
பார்வை : 103

மேலே