காதல் என்ற வார்த்தை

காதல் என்ற வார்த்தை யவளின்
காதில் தேனாய்ப் பாய்ந்தது!
கன்னிப் பருவம் கவலை யின்றிக்
கனவு கண்டு சிரித்தது!
தூது சென்ற தோழி வரவைத்
சுற்றி விழிகள் தேடுது!
தொலைந்து போன இதயம் கூடத்
துடிக்க மறந்து கசியுது!
சாதி வந்து நடுவில் நின்று
சாத்தி ரங்கள் பேசுது!
தடையு டைத்து வந்த வுள்ளம்
சட்ட வுதவி நாடுது!
நீதி மன்றம் சேர்த்து வைத்து
நெஞ்சில் பாலை வார்த்தது!
நேர்மை வழியில் பயணம் தொடர
நிறைந்த வாழ்த்த ளித்தது !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-Mar-20, 2:32 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 62

மேலே