தொடரும் பயணங்கள்

இன்றைய கடமை முடிந்ததென
இனிமேல் ஓய்வெனக் கதிரவனும்
சென்று கொண்டே வான்வீதியில்
செம்மை காட்டினான் வனப்பாக,
என்றுமாய்ப் பேச்சிலே காதலர்கள்
ஏக்கமாய்ப் படகுகள் கரையினிலே,
என்றும் தொடரும் பயணமிவை
என்பதை மனதில் கொள்வாயே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (25-Mar-20, 6:33 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : thodarum payanangal
பார்வை : 111

மேலே