உன் நினைவில் நான்

உன் நினைவில் நான்


மன கவலை என்பது ஒரு உயிரை - கொல்லும்
ஆயுதம் என்பது தெரிந்தும்
அவனை மறக்க நினைத்து நினைத்து - மன
கவலை அதிகரிக்கிறது உன் நினைவால் .........

நீங்கள் சென்ற வாசபடியை பார்த்தபடியே - என்
காலங்கள் கரைகிறது கோலபொடியைபோல்
நம் தேவைக்காக அனுப்பும் பணம் - என்
தேவையை பூர்த்தி பண்ணுமோ!

உங்கள் விடுமுறை நாட்களுக்காக நாள் காட்டியில்
நாள்களை எண்ணி கொண்டு எண்ணுகிறேன்
தொலைபேசியில் பேசிக்கொண்டே தொலைந்த காலங்கள்
எங்கே சென்றதே என் கணவா .............

வானூர்தியில் சென்றவன்
என் வாழ்க்கை வானமே !
நீ என தெரியாத
குடும்ப கஷ்டத்தை அறிந்து சென்றவன்
நான் படும் கஷ்டத்தை அறிவாயோ !

இதற்கு எப்பொழுது விடுதலை - என்
கணவா விடை சொல்
விடை சொல்
என் வெளிநாட்டு கணவனே . ...

மு.க. ஷாபி அக்தர்

எழுதியவர் : மு.க. ஷாபி அக்தர் (27-Mar-20, 4:20 pm)
சேர்த்தது : மு கா ஷாபி அக்தர்
Tanglish : un ninaivil naan
பார்வை : 594

மேலே