ககர வருக்கப் பாட்டு
நேரிசை சிந்தியல் வெண்பா
(ஏந்திசைச் செப்பல் ஓசை)
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா 70
- கவி காளமேகம்
பொருளுரை:
‘ககர வருக்கமே முற்றவும் அமைந்து வருமாறு ஒரு செய்யுளைச் செய்க’ எனக் கேட்டவர் வியக்குமாறு சொல்லிய்து இது.
பொருளுரை: காக்கைக்கு கூகை இரவில் வெல்லுதற்கு ஆகாது, கூகைக்குக் காக்கையைப் பகலில் வெல்லுதற்கு ஆகாது, அதனால், அரசனுக்காக அவன் நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பாற்றுதற்கும்; கொக்கைப் போலத் தகுதியான சமயம் வரும் வரை காத்திருக்க வேண்டும், பகையை எதிர்த்து, காப்பாற்றுவதற்கு, (காலமற்ற காலமாயின்) சாமர்த்தியமுள்ள தலைவனுக்கும் இயலாதாகிப் போய்விடும்.