உன்னோடுதான் டார்லிங்

அ னா ஆ வன்னா நான் படித்த போது
அவ்வை பாட்டி தண்டூன்றி என்னுடன் நடந்தாள்
க னா காவன்னா படித்து நான் கவிதை எழுதிய போது
நீ என்னுடன் கைகோர்த்து நடந்தாய்
ஒரு நாள் அவ்வை ஆகி நீ தண்டூன்றியோ ஊன்றாமலோ நடந்தாலும்
உன்னோடுதான் நான் நடப்பேன்
இது சத்தியம் டார்லிங் !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Mar-20, 10:26 pm)
பார்வை : 97

மேலே