கொரோனா 5

கொரோனா (5)

===============================================ருத்ரா



நீ என்னை பார்த்ததை

நானும் பார்த்தேன்.

நான் பார்த்ததற்கு

பதிலாக

மீண்டும் நீ

என்னைப் பார்ப்பாய்

என்று

தினமும் பார்த்துக்கொண்டே தான்

இருக்கிறேன்.

காதல்

அப்படியொரு வைரஸா என்ன?

பார்க்க மறுக்கும் ஒரு பாசாங்கில்

அலட்சியம் செய்வது போல்

ஆனால் அதை விட ஒரு

கூர்மையான‌

கண்ணுக்குள் தெரியாத ஒரு

பார்வையாக அல்லவா ஆக்கி

உன் கண்களால் சோப்பு போட்டு

என் கண்களை

கழுவிக்கொண்டு இருக்கிறாய்!


=============================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (28-Mar-20, 10:50 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 291

மேலே