இப்படியும் வந்த உதயம்
உதயமானது எப்போது இன்று
சேவல் கூவலையே
காகம் கூட இரையலையே
குயிலோசையும் கேட்கலையே
கூவ மறந்ததோ குயில்
தினம் தினம் தெருவிற்கு வரும்
நரிக்குறவனைத் துரத்தும்
தெரு நாய்கள் எங்கே போய் ஒளிந்துகொண்டன
பொழுது புலர வரும்
சைக்கிள் 'டீ காரர் .........அவர்
மணி ஓசைக் கூட கேக்கலை
சுட சுட செய்தி ஏந்தி வரும்
'தந்தி' கூட வாசலில் காணோமே
தெருவே வெறிச்சோடி போயிடுச்சே ..... ஏன்
'ஊரடங்கு உத்தரவோ',,,,,,, ஆமாம் ஆமாம்
பிரதமரின் கோரிக்கைக்கு தலை சாய்த்து
மக்கள் அவரவர் வீட்டுக்குள்ளே தாமே முடங்கி இருக்க
இந்த அமைதி ஏன் என்று புரியா
பறவைகள், விலங்கினங்கள் தாமும்
சப்தம் போடாது இருக்க
இதெல்லாம் கண்ணுக்கு தெரியா
கொரோனாவின் ஆக்ரமிப்பில்
செய்வதறியாது மக்கள்.... ஆ
இதற்கு தீர்வு எப்போது .... யார் தருவார்
மீண்டும் ரம்மியமான உதயம்
நாடி காத்திருக்கும் நான் .....
அந்த சேவலின் கூவல், காகத்தின் கரையில்
கோகுலத்தில் காலை இசைக்கூவல்....