😱😱எதற்காக🤷‍♀️😱😱

உடல் ஊனமுற
உணர்வுகள் உருக்குலைய
ஊன்றிப் பிடித்தபடி
இன்னும் வாழ்க்கை

மலராக மணம் வீசி
மாண்போடு வாழ்வதாய்
பகற்கனவு

முலாம் பூசிய
செப்பு பாத்திரம்
புளியில்லை இங்கு
உருக்குலைக்க

தேன்போல் இனிப்பாம்
வாழ்வின் ரணங்கள்
மனக்காயங்களாய்
புள்ளியிடாக் கோலங்கள்

தேடியெடுத்திருந்ததால்
தெவிட்டியது தெருப்படலை
இன்னும் தேடிக் கொண்டிருக்கிறான்
தேசத்து முல்லைக்காய்

எழுதியவர் : ஆசிபொறி (30-Mar-20, 2:36 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 355

மேலே