கணவனும் 💞காதலனும்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கண்ணானவன் அவனே
கண்ணின் கருவிழியானவன் அவனே.......
விழியின் ஒளியானவனும் அவனே....

நெஞ்சில் நிறைந்தவனும் அவனே..
உயிரில் கலந்தவனும் அவனே...

என் தாயின் அன்பும் அவனே..
தந்தையின் அரவணைப்பும் அவனே.

என் நட்பின் தோழமையும் அவனே.
காதலின் கனிவும் அவனே...
என்னை முழுவதுமாய் ஆட்கொண்டவனும் அவனே...

என்மீது உயிராய் இருப்பவனும் அவனே...
என் உயிருக்கு மேலானவனும் அவனே....

தொல்லைகள் நானும் தந்தாலும்
சிறுபிள்ளையென அதையும் பொறுப்பானே....

என் பார்வையின் அர்த்தம் புரிந்தவன் அவனே...
அவன் மட்டுமே.....

என் கணவனும் அவனே... 💞
என் காதலனும் அவனே....

எழுதியவர் : Karikayal (30-Mar-20, 3:53 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
பார்வை : 684

மேலே