விழித்திருக்கும் இரவு

எரிந்து கொண்டிருக்கும்

ஒரு மெழுகுவர்த்தி

தன் சுடர் பரவும் தூரம் வரை

எத்தகைய இருளையும்

தன்னிடம் அனுமதிப்பதில்லை...

அவமதிக்கப்பட்ட இருளோ

காத்திருக்கிறது

அணையும் மெழுகுவர்த்தியின்

உருகிய உடலை

கவ்விக் கொள்ள....

அத்தனைக்கும் சாட்சியாக

இருக்கிறோம்

நானும் என்னுடன் விழித்திருக்கும் இந்த நீண்ட இரவும்....

எழுதியவர் : S.Ra (31-Mar-20, 7:51 am)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 362

மேலே