பசி 👳♂️
பசி தீ மூட்டிய நெருப்பில்
பற்றி எரிகிறது
----வயிறு
கடைத்தெரு திறந்திருக்கு வாங்க
காசு தான் இல்லையே......
தெனக்கூலி நானய்யா. .
இப்போ வேலைவெட்டி இல்லைய்யா....
பசி வந்து கிள்ளுதய்யா வயித்த.
சிறுக சிறுக சேத்த காசும்
நேத்தோட போச்சு....
இன்னைக்கு சோறுதண்ணி இல்லையே....
அரசாங்கம் கொடுக்குமாம் ஆயிரம்..
அது வந்து சேருமோ சேராதோ?
அதுவரை என் வீட்ல அடுப்பு ஏரியாதே. 🔥🔥🔥