என் வேண்டுதல்

இப்போதெல்லாம் ஒவ்வோர் இரவும்
படுக்கப்போகும் முன் கடவுளை நான்
வேண்டுவது இதுவே, 'என்னப்பா என்
இருடீகேசா நாளைக் காலை விடியும்
பொழுது கொரோனா உலகைவிட்டு
ஒட்டுமொத்தமாய் விலகிவிட்ட நல்லதோர்
இனிய காலைப்பொழுதாய் புலர வேண்டும்
புள்ளினங்கள் இனிதே ஆர்ப்பரிக்க
கதிரோனின் இளைய கிரணங்கள் வருடலில்
பூத்துகுலுங்கிடும் கமலங்கள் எம் மனதில்
புத்துணர்ச்சி மிக்க தந்திட , போன நாட்கள்
கெட்ட சொப்பனமாக எம் மனதைவிட்டு அகல
உலக மக்களெல்லாம் துயர் நீங்கி இனிதே வாழ்ந்திட
அருள்வாய் இறைவா எம்மைக்காப்பாய்' என்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாயு (1-Apr-20, 9:06 am)
Tanglish : en venduthal
பார்வை : 329

மேலே