முட்டாள்கள் தினம் 😁
முட்டாள்கள் தினம்😀
முடிந்தவரை முட்டாளாக
இருக்க பழகுங்கள்.
சமூகம் குறை சொல்லும்.
கவலை படாதீர்.
சொந்தம் பந்தம்
கேவலமாக பேசும்.
கண்டுகொள்ளாதீர்.
அதிகபட்சமாக இவ்வுலகில் இருப்பது
முட்டாள்களே.
அறிவாளிகள் அல்ல.
அப்படி அறிவாளிகளே ஆக்கிரமித்து இருந்திருந்தால்
வெறும் உம்மணா மூஞ்சுகளாக இவ்வுலகம் காட்சி அளித்திருக்கும்.
மனிதன் வாழ் நாட்கள் விரைவில் முடிவுக்கு வந்திருக்கும்.
தடுக்கி விழுந்தே தெளிவடைவோம்.
நம் செயலால் சிரிக்கவும் வைப்போம்.
அனைவரையும் சிந்திக்கவும் வைப்போம்.
ஒரு ஐய்யம்?
முட்டாளா?
காரியகிறுக்கனா?
- பாலு