விடியல் யாருக்கு சொந்தம்
என்னால் முடியும்
உன்னாலும் முடியும்
தொடர்ந்து முயன்றால்
எல்லோராலும் முடியும்
காலை உதயம்
யாருக்கு சொந்தம்?
கண் விழித்து பார்த்தால்
அது அனைத்திற்கும் சொந்தம்
உனக்கும் எனக்கும்
புல்லுக்கும் பூவிற்கும்
பறவைக்கும் விலங்குக்கும்
அனைத்து உயிருக்கும்
பொதுவானது விடியல்....!
கண்விழித்து பாருடா
பல உண்மை புரியும்....!