முதல் நாடகம்

“அம்மு வாடி.... நம்ம டிபார்ட்மெண்ட் வாசல்ல கூட்டமா இருக்கு...வா! போய் ஒரு அட்டனன்ஸ் போடலாம்” என்று என் அன்புத் தோழி வளர்மதி அழைக்க.... கேன்டீனில் எனக்குப் பிடித்த சமோசா சாப்பிட்டுக் கொண்டிருந்த நான்.... அதை வேக வேகமாய் விழுங்கி... அவளுடன் எங்கள் வேதியல் டிபார்ட்மெண்ட் வாசலை ஏகினேன்..... எங்கள் வேதியல் இரண்டாம் ஆண்டு மாணவிகளின் என்னுடன் சேரந்த ' 13 girls army' மொத்தமும் அங்குதான் குழுமி நிற்க.... நடுவில் எங்கள் பேராசிரியர்கள் கீதா மேம் மற்றும் மிர்னாளினி மேம் இருவரும் வரப்போகும் இன்டர் டிபார்ட்மெண்ட் போட்டிகள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.... காரணம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளிலும் வேதியல் துறை தான் அனைத்துப் போட்டிகளிலும் முதல் பரிசை பெற்றிருந்தன .... அதனால் அந்த வெற்றிக் கோப்பையை தக்க வைத்துக்கொள்ள கூடுதல் பொறுப்பு அவர்களுக்கு இருந்ததால் ...ஆலோசனை மிக பலமாக இருந்தது.... மொத்தம் ஐந்துப் போட்டிகள்... பரதம், கிராமிய நடனம், வெஸ்டர்ன் டேன்ஸ், பாட்டு மற்றும் ஒரு நாடகம்..... பரதம் ஆட என் தோழி சித்ரலேகா தேர்ந்தெடுக்கப்பட்டாள்..... மற்ற நடனங்களுக்கு திரைப்படப் பாடல்கள் இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்டன.... கடைசியாக நாடகம் பற்றி விவாதம் தொடங்க..... எங்கள் பேராசிரியர் கீதா அவர்கள் புதிய நாடகம் எழுதலாம் என்று ஆலோசனை கூறினார்..... ஏனென்றால் நாடகத்தின் கருபொருள் தான் பரிசை தீர்மானிக்கும் என்பதால்...... அவரே நாடகத்திற்கு கருப்பொருளையும் முன் மொழிந்தார்...... அதை மையமாக வைத்து நாடகம் எழுத வேண்டும்.... என் தோழிகள் ஒவ்வொருவரும் புதுப்புது கதைகளை வடிவமைக்க

நானும் என் கதையை அவிழ்த்துவிட.... எங்கள் பேராசிரியர்களுக்கு அது மிகவும் பிடித்துவிட்டது.... நாடகம் எழுதும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது ....

ஆனால் எனக்கு இதுதான் முதல் அனுபவம்..... இரவு முழுதும் விழித்து எழுதி எழுதி கிழித்து கிழித்து .... என் அறைமுழுவதும் குப்பை தொட்டியானது தான் மிச்சம்... அப்படியே உறங்கிவிட்டேன்.... காலை அப்பா எழுப்பி ...”என்னம்மா ..! நாடகம் எந்த நிலையில இருக்கு ?” என்று வினவ..... அம்மா என்னை பார்த்து புன்னகைத்த வண்ணம் “இப்போ எழுது ராஜாத்தி “ என்று சொல்லி நகர்ந்தார்....

எழுதத் தொடங்கினேன் .... அன்று உருவானது எனது முதல் நாடகம் “கலைந்த கனவுகள்”
மேலோகத்தில் பாரதியும் கம்பரும் All India Radio வில் செய்திகள் கேட்டுக் கொண்டிருக்க.... அதில் தமிழகம் எங்கும் அடுத்தநாள் பாரதி நூற்றாண்டு விழாவும் கம்பன் விழாவும் கொண்டாடும் செய்தியை அறிந்து.... அதை நேரில் கண்டுகளிக்க பல கற்பனைகளுடன் அவர்கள் பூவுலகம் வர..... பல முரண்பாடான காட்சிகளைக் கண்டு அதிர்ந்து....அரண்டு மேலுலகம் விரைந்திட... மீண்டும் அவர்கள் மேலுலகம் சென்று அடுத்தநாள் செய்தியை கேட்க.... அதில் நேற்று பாரதி நூற்றாண்டு விழாவும் கம்பன் விழாவும் நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.... அவர்கள் கனவுகள் நனவாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவற்றைக் காண .... நம்மிடையே பாரதியும் கம்பனும் இல்லையே.... என்ற ஆதங்கத்தோடு செய்தி முடிய.... அடுத்து வந்த தேனிசையில்
“கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை அவன் மலரென்று தானே கற்பனை செய்தானே என்றப் பாடல் இசைக்க.....

இங்கு கம்பன் மட்டுமா ஏமாந்தான்... பாரதியும் சேர்ந்து ஏமாந்தான்....அவர்கள் ஏமாற்றத்திற்குக் காரணம் நாமா..? அல்லது அவர்களின் கனவுகளும் கற்பனைகளுமா...?
அவர்கள் கனவுகள்
கலைந்த கனவுகளாயின என்ற background voice ஒலிக்க நாடகம் முடிந்தது......

இந்த நாடகம் முதல் பரிசு பெற்றதோடு.... கல்லூரி முதல்வர் செல்வி.விமலா அவர்களின் பாராட்டையும் பெற்றது...... கல்லூரிக்கு பாரதி கலைக் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டபோது..... மீண்டும் இந்த நாடகமே அரங்கேற்றம் செய்யப்பட்டு எனக்கு பெருமை சேர்த்தது......

(நாடகத்தில் நான் நடிக்கவில்லை..... ஆனால் வானொலி செய்தியில் வாசித்தது மட்டும் நான் .... ஆகாஷ்வாணி...... செய்திகள் வாசிப்பது அமுதா வைகுண்டம் என்று ஆரம்பித்தது..... இன்றும் கேசெட்டாய் என்னிடம் உள்ளது)

எழுதியவர் : வை.அமுதா (2-Apr-20, 4:54 pm)
Tanglish : muthal naadakam
பார்வை : 53

சிறந்த கட்டுரைகள்

மேலே