கன்னியரும் காளையரும், மங்கையும் மணாளனும் 💕

கன்னியரும், காளையரும்...!
மங்கையும் மணாளனும்...! 💕
💞💕💓 💖 💓💕💞
முகில் மோதி
விலகும்
கார்மேக சிகை யிரு
வண்ண மயில்
தோகை,
கூந்தல் அழகு! 👱‍♀️

வெளிர் ஓடை
விளையாடும்
சிறு மீன்போல்
இருகரை ஓடும்,
கயல் 🐟
விழி அழகு!👁

அகல் விளக்கின்
அணையா
தீபமாய்,
செவ்விதழ் 👄
தாங்கி நிற்கும்
மூக்கு அழகு! 👃

கரம் கூப்பி
வணங்கும்
சிசு போலே,
பட்டுக் கன்னம்
நிற்கும்
செவி அழகு!👂

முந்தானை
இளந் தேக்கு நிற
கரமேந்தி,
கொடியிடை
யசைத்து,
குறுநடை புறவின்
நடை அழகு!👣

வண்ணக் குமிழ்
மின்னிடப் படும்
வெள்ளொளி
முத்துப்
பல் அழகு!🦷

வானொழுகி
வாழ்த்திட,
வைகை சுற்றும்
சூழல் போல்
கண்ணக்
குழி அழகு!😍

இப்படியாய்...
கவிதையாய்...📝
கண்ணியமாய்...
காதலாய்...🥰

கன்னியவள் அழகை
கவி போலே,
காதலோடு,
கண்ணியமாய்...
சொன்னால்...!🗣

நாணம் முகமாடி,
கருவிழி ஒதுக்கி,
கன்னி முகம்
சிவக்கும்!
மனம் மகிழும்!
ஆனந்தம் பூரிக்கும்!

அதின்,
செல்லச் சிரிப்பில்...
கன்னியர் தம்
கொஞ்சும் தமிழ்,
இளம் காளையர்
நெஞ்சம்
சிறை பிடிக்கும்!💘

இப்படியோ?
மங்கை...👩‍⚖️
மனையானாள்!👰
இனிய வளினி
மயங்குவதோ? 🥰

மனம் கவர்ந்த
மணாளன்
வார்த்தையிலே!
அவ் வார்த்தையும்...
அவள் அழகை
வருணித்தாலே!

மணாளன் செயலோ
அனிச்சையாய்
நிகழ்வது,
நறுமுகை
நல் மனம்,
குணத்தாலே!
அடிக்கடி
நிகழ்த்துவது
நல் நடிப்பாலே! 😂

- ச.கி

எழுதியவர் : ச.கில்பர்ட் (ச.கி) (5-Apr-20, 9:20 am)
சேர்த்தது : ச கி
பார்வை : 1492

மேலே