இருளிலும் ஒளிரும் இந்தியா

இன்று... இந்தியாவின்
இரவு ஒன்பது மணி....
இருளிலும் ஒளிரப் போகிறது...

பெஞ்சமின் பிராங்ளின்
மைக்கேல் பாரடே
தாமஸ் ஆல்வா எடிசன்
காலங்களின் இறந்த காலம்
நிகழ்காலத்தில் நிகழப் போகிறது...

இன்று கையேந்தி
யாசகம் பெறுபவரும்
காணும் மின்னொளியை
சேர சோழ பாண்டிய
மன்னாதி மன்னர்கள்
அசோக சக்கரவர்த்தி
ராஜ்ஜியங்களும்
அக்பர் பேரரசும்
அலெக்சாண்டர் ஆதிக்கமும்
கண்ணால் கண்டிராது...
மீண்டும் அந்தக்காலம்
ஒரு ஒன்பது நிமிடம்
வந்து போகப் போகிறது...

ஒட்டுமொத்த இந்தியா
தன் நூற்று முப்பது
கோடி மக்களோடு
உலகின் பல கோடி மக்கள்
ஒரே நேரத்தில் நினைத்துப்
பார்க்கும் நிகழ்வு
ஒன்பது நிமிட மின்னொளி துறப்பு...
கொரானா வைரஸின் இறப்பு
இதனால் நிகழட்டும்...
வாழ்த்துக்கள்...
👍👏😀🙏💐🚲

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (5-Apr-20, 9:22 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 140

மேலே