மருத்துவர்கள்

தொற்று நோய்க்கு முற்று
வைக்கப் போராடும் போராளிகள்

இவர்கள் கருவறையில் இருக்கும் தெய்வங்கள் அல்ல கருவறையில் இருந்த தெய்வங்கள்

வெள்ளை ஆடை அணிபவர்கள் நோயாளிகள் யாரையும் வெள்ளாடாய் நினையாதவர்கள்

இவர்கள்
எமனிடம் போராடி நோயாளியை
சாகாமல் மீட்கும் சாவித்திரிகள்

மா திரை அணிந்து
உயிர் கொல்லும்
கிருமிக்கு மாத்திரை
கொடுப்பவர்கள்

பிறர் தேகத்தை காத்து
தேசத்தை காக்கும்
வெடி மருந்து
இல்லாது வெறும் மருந்து
வைத்திருக்கும்
இராணுவ வீரர்கள்

இவர்கள்
மருத்துவர்கள்
என்று அழைக்கப்படும்
மகத்துவர்கள்

இவர்கள்
வைரசை அறுக்கும்
வைரங்கள்

இவர்கள் குறைவின்றி
வாழ இறைவன்
தரவேண்டும் பழங்கள்
வரங்கள்

எழுதியவர் : குமார் (7-Apr-20, 5:53 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : marutthuvargal
பார்வை : 150

மேலே