நதி என்றும் ஜீவ நதி
ஓடும் நதி நீர்....
மண்ணிற்கு ஆகாரம் ஆதாரம்
வளரும் பயிர்களுக்கு உயிரோட்டம்
வாழும் உயிர்களின் தாகத்திற்கு அருமருந்து
இந்த பூமி இருக்கும் வரை
நதிக்கேது சாவு
அது என்றும் இறைவா ஜீவ நதியே
மண்ணின்மேல் ஓடினாலும் இல்லை
மறைந்ததுபோல் இருந்து
மண்ணின் கீழே மன்னீராய் ஓடுமே நதியாய்
நதி என்றும் ஜீவ நதி
நல்ல நதி நீரை மாசு படுத்தும் மனிதர்
நதியோரம் தொழிற் பெட்டகத்தில்
தோல் பதனிடுவார்..... அதன் கழிவு நீரை
நதியில் கொண்டு கலந்திடுவார்....
அவை நச்சு ரசாயனக் கலவை......
தெரிந்தே மனிதன் செய்யும் மாபெரும் குற்றம் இது
பாவம் நதிக்கரையோர மனிதர்
இந்த நதி நீரைக் குடித்து நோய்வாய்ப்பட
சிலர் மாண்டும் போக......
யார் குற்றம் இது
நதி நீர்...... இறப்பில்லை
கலப்பில்லா நதி நீர் என்றும் அமிர்தம்
அதை விட நீராக்குவது மானிடர்!