காதல்
அந்திசாய் வேளையிலே முல்லைக்கொடி அருகே
அகத்திற்கு தெரியாமல் நீ வந்து என்னைப்பார்த்து
முல்லைச்சிரிப்பு உதிர்த்து செல்வாய் காதலாய்
களவியல் இது தவறேதுமில்லையே என்று சொல்வதுபோல்
காதலால் என் உள்ளத்தை தூண்டிவிட்டு நீ இப்போது
வாராமல் இருப்பதேனோ முல்லையும் வாட
காதல் ' குவாராண்டினா' இது தெரியாது அலையுதே
என் மனம் , வந்திடுவாய் வனிதையே தாமதம் வேண்டாம்
வந்து என்னையும் வாழவிடு காதல் தந்து உந்தன்
கள்ளச்சிரிப்பால் அந்த முல்லையும் வாழ்ந்திடவே
என்றுபோல் சிரிப்பதுபோல் பூத்து