அவளுடன் அந்த நிமிடம்

அவளுடன் அந்த நிமிடம்

என்னென்று சொல்வேன்
ஏனென்று சொல்வேன்
அவளா இப்படி செய்தால்...

ஏன் மௌனம் என்றேன்
அவளின் மயக்கும் கோவையிதழ் புன்னகைத்தது காரணம் யார் அறியோர்....

புன்னகையின் காரணம் கேட்டேன்
மெளனமே பதில் - மௌனமே சம்மதமா என்றேன்...

அதற்கும் அவ்விதழ் புன்னகைத்தது
சற்று நிமிர்ந்தாள்
ஓர் நொடி மௌனம்

அழகுமயில் அசைந்ததுபோல் கண்ணிமையசைந்தது...

நளினம் தெளிக்கின்ற அவள் விழியைக் கண்டேண் அதுவுணர்த்தியது என் எண்ணங்களை அவள் விழியில்..

அவ்விழிகள் அவளின்  செந்தாமரைக்கரங்களை
பிடிக்கச்சொன்னன பிடித்தேன் 
இனியும் என்ன தயக்கமென்றேன்...

இதற்கும் அவ்விதழ் புன்னகைத்தது
புன்னகையின் அர்த்தம் அறிய மனம் ஏங்கியது..

அதை அவளும் உணர்ந்தாள்...
காலில் கோலமிட்டபடி கையில் பிடித்திறிந்த முந்தானையை கசக்க

சல சல வென்ற வளையலின் ஓசை என்குருதியில் ஓட....
மீண்டும் ஓர் நொடி மௌனம்
என்னெஞ்சோ படபடக்க...

மயக்கும் கருவிழிகள் என்னை நோக்க...
செக்கச்சிவந்த அம்மயிலின் செவ்விதழ்கள் என்மனதில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தது போல் காதல் எனும் இசையை இசைத்தது - என் இதழில்...

 எழுத்து சே.இனியன்

எழுதியவர் : சே.இனியன் (10-Apr-20, 11:45 am)
பார்வை : 487

மேலே