காதலே என் காதலே
காதலே என் காதலே !
நட்பை தந்தாய் நண்பனாய் ;
உறவுகள் தந்தாய் தலைவனாய் ;
உடமைகள் தந்தாய் உரியவனாய் ;
எனக்குள் உயிர் தந்தாய் கணவனாய் ;
எத்தனை துயரினிலும் நான் துவளாது காக்கின்றாய் ;
கண் ஓரங்களில் துளிர்க்கின்ற ஈரமது பெருகிடாது பார்க்கிறாய் ;
உயிர் ஒன்று தான்; அது.. இரு இடமதில் இரு உடலதில்
இருந்திடும் மாயம் செய்வதும் நீயே !
காதலனே என் காவலனே ...
உள்ளமதில் கோட்டை கட்டி
இறை ஒளியை தீபமாக்கி
உயிர் ஓசையை மணி ஒலியாய்
உணர்வுகளை பூக்களாய்..
நித்தம் நம் காதல் பூஜை செய்கிறேனே !
என் தலைவா..
நானும் நீயும் நாமாய் வாழ்வது தானோ காதல்..
நாமும் வாழ்ந்து நம் சுற்றமும் வாழ்வதும் தானே காதல் ;