உடன்பிறந்தோர் தினம்
உடன்பிறந்தோர் தினம்
அம்மா, அப்பா பிரதிகள் நாம்!
தொப்புள்கொடி உறவுகள் நாம்!
ஒருகொடியின் மலர்கள் நாம்!
இருந்தும்
வேறு வேறு இயல்பினர்தாம்!
ஒருவருக்கு இன்பம் எனில்
ஒருங்கிணைந்து மகிழ்வோம் நாம்!
ஒருவருக்கு துன்பம் எனில்
தோள் கொடுக்கத் தயங்கோம் நாம்!
தூரதூரமாய் வாழ்ந்தாலும்
உள்ளம் நெருங்க வாழ்வோம் நாம்!
நல்லன அல்லன நடக்கும் தருணம்
ஓடிவந்து இணைவோம் நாம்!
உள்ளம் குழம்பி நிற்கும் வேளை
முடிவு எடுக்கத் திணறும் காலை
ஒருவருக்கொருவர் நட்பாவோம் நாம்!
ஒன்றாய்ப் பிறந்தோர் நன்றாய் வாழ என்றும் இறைவனைத்
தொழுவோம் நாம்!