உனக்காக காத்திருக்கிறேன் தோழி

இவ்வுலகில் யாருமே
கண்டிராத ஓர் புதிய உணர்வு...
என்னுள் புரியாமலே இருந்த உறவு...
புரிந்தபின் நீண்டநாள்
தொடர வேண்டும் என்ற உணர்வு...
அப்படி ஓர் ஆழகிய உறவு...
நம் உறவு...
ஏதோ ஓர் சிறிய விரிசல்...
நம் உறவை பிரிவை நோக்கி
பயணிக்க வைத்தது...
நாம் பேசப்படாத வார்த்தைகள்
என்னை நிலைகுலைய வைத்தது...
உன் பிரிவு மரணத்தை விடவும்
மிகக் கொடுமையாக இருந்தது...
வாழ்வில் பல பிரிவுகளைச்
சந்தித்த என் மனம்...
ஏனோ உன் பிரிவை
ஏற்க மறுத்தது...
என் வாழ்வே வெறுத்தது...
உன் பிரிவை என்னி என்னி
என் மன அமைதியும் போனது...
வலிகளும் தாங்க வில்லை...
வாழவும் ஆசையில்லை...
தோழியே போதும் போதும்
என்னால் முடியவில்லை...
உன் முடிவினை சொல்...
உனக்காக காத்திருக்கிறேன்...
உன் தோழனாக...
என் வாழ்வெங்கும்...


..... என் உயிர் தோழி முத்துச்செல்விக்கு இக்கவிதை சமர்ப்பணம்......

எழுதியவர் : ஜோவி (11-Apr-20, 11:20 am)
பார்வை : 8985

மேலே