துதி

கோவில்கள் நடை சாத்தியிருக்க
கொரோனாவின் கோர தாண்டவ இந்நாளில்
சுத்தியோரம் வாழும் குரங்கு மற்றும் மயில்
ஏனைய பறவைகளுக்கு பழமும் கடலையும்
உணவாய்த் தரும் பக்தர்கள் இல்லை
பாவம் பசியால் அலையும் வாயில்லா பிராணிகள்
குடிக்க தண்ணீருக்கும் அலையுதாம் அவதியில்
மயில் வாகனனே முருகா மால் மருகா
வானர படைகொண்டு இலங்கேசனை வதைத்தோனே ராமா
இன்னும் கருணையேன் சுரக்கலையோ இந்த
இன்றைய மக்களின் பிராணிகளின் நிலமைக்கண்டு
தாமதம் வேண்டாமப்பா முருகா மயிலேறி வந்து
கூரான வேலால் கொரோனாவைக் கொய்திடுவாய்
இல்லை உன் மாமனுக்கு சொல்லிவிடு ராம
தனுஸிலிருந்து ராம பானம் விடுத்து அன்று
வாலியை மாய்த்ததுபோல் இன்று இந்த
கோர கொரோனாவை அழித்தொழிக்க
உலகத்தை உய்விக்க ........
மீண்டும் கோயில் வாசல் திறக்க
மக்கள் பக்தி வெள்ளம் பெறுக ....
குரங்குகளும் பறவைகளும் மயிலும்
பழம் கடலலைத் தின்று நீர் குடித்து
அன்றுபோல் என்றும் இன்புற்றிருக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Apr-20, 3:53 pm)
Tanglish : thuthi
பார்வை : 71

மேலே