பணம் vs காதல்
ஹாய் நான் பணம், நீங்கள் ?...
நான் காதல் 🙏
பணம்: அப்படியா மகிழ்ச்சி உங்களை சந்தித்ததில்.
காதல்: எனக்கும் மகிழ்ச்சியே 😊
பணம்: உங்களுக்கு தெரியுமா.
என்னை அனைவரும் எவ்வளவு ஆசை படுகிறார்கள் என்று.
காதல்: தெரியாது நான் ஒரு உன்னதமான உணர்வு இது தான் எனக்கு தெரிந்தது.
பணம்: என்னை பற்றி கூறுவது 'பணம் பத்தும் செய்யும்' என்று என்னை போற்றி வரவேற்பு தருவார்கள் தெரியுமா.
காதல்: உங்களுக்கு பதில் தருவது விரும்ப வில்லை தான். எம்மை புனிதமாக கருதி பல உள்ளங்கள் ஏற்கின்றனர்.
பணம்: என்னை வைத்திருப்பவர்கள் உலகையே சுற்றி வர முடியும்.
காதல்: இதற்கும் பதில் வேண்டுமா ?..சரி
காதலர் இருவரும் எம்மை கொண்டே உலகத்தை காண்பார்கள்.
பணம்: என் பெயர் சொன்னாலே 'பிணமும் வாய் பிளக்கும்'.
காதல்: மரித்த பின்னும் காவியமாக... வாழ்வார்கள் எம்மை ஏற்றவர்கள்.
போதும்.. போதும்..
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
நான் தான் தமிழ் .
பணம் கொண்ட காதலில் சலிப்பு தட்டாது.
தேவைக்கு ஏற்ப வைத்து கொண்டு
வாழ்வாங்கு வாழ்க.....
பணம் மட்டுமே காதல் அல்ல, காதல் மட்டுமே வாழ்கையும் அல்ல.
தமிழ் நான் என்னை புரிந்து கொள்ளுங்கள்.
சரி நான் வருகிறேன். அங்கு ஒரு தமிழ்ச்சங்கத்தில் அழைப்பு வந்திருக்கிறது. எம்மை பற்றிய சொல்லாடல் .மகிழ்ந்திருங்கள்... மகிழ்ந்திருங்கள்.
நன்றி
by
Piyu
அனைத்து காதல் கொண்ட மனதிற்கும் புரிந்திருக்கும்.
இது என் சிறு முயற்சி கதை ,கவிதைக்கு பதிலாக.