அசைந்தாடி வா

காலத்திற் கேற்றாற்போல் காஸ்ட்யூம் அணிந்தாயோ
கோல வெழில்கண்டால் கோகுலமே வாய்பிளக்கும்
பாலுடன் பட்டரும் பாசத்து டன்தருவேன்
நீலவண்ணா நீயோடி வா .

கையிலே கொம்பெதற்கு? கௌ(cow)மேய்க்கப் போனாயோ?
பையநின் பேரழகு பார்ப்போரை ஈர்த்துவிடும்
மையலுடன் கோபியரும் வந்தணைத்துக் கொஞ்சுவார்
வையகமே கொண்டாடும் வா.

அடடாவுன் ஹேர்ஸ்டைல் அசத்துதே ! உன்றன்
நடைகூட ஸ்டைலாக நைஸா யிருக்கத்
தடைபோட மாட்டார் தயங்காம லிங்கே
மிடுக்கோடு மின்னலாய் வா.

குழலெங்கே கண்ணாவுன் கோபிய ரெங்கே
விழியில் சிறுகுறும்பு மின்னு கிறதே
மழையில் நனைந்தாலென்? மௌனமா யிங்கே
அழகாய் அசைந்தாடி வா.

ஓவியம் - கேசவ்ஜி

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Apr-20, 1:25 am)
பார்வை : 42

மேலே