வண்ணப் பாடல்

தான தான தானான தானத் தனதான
தான தான தானான தானத் தனதான

ஈச னாரை நாள்தோறும் பாடித் தொழுவேனே
ஈடி லாத தேவார மோதிக் கனிவோடே !

நீச ரோடு நாயேனும் மோதற் றகுமோசொல்
நீடு வாழ வேறாரை நாடித் திரிவேனே !

காசி நாத னேநீறு பூசித் தெளிவோடே
கால னோடு போராட நீசற் றருளாயோ !

வாசம் வீசு பூமாலை தோளிற் பொலிவோடே
மாசி லாத மீனாளின் நேயப் பெருமானே ..

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Apr-20, 1:34 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 22

மேலே