சித்திரைத் திருநாள்

சித்திரைத் திருநாள்:

விசித்திரங்களும் விநோதங்களும்
கணக்கில் கொண்ட

பல சித்திரை கொண்டாட்டமும் குதுகலமுமாகவே கடந்தது

மீண்டும் ஒருமுறை தன்முறை வர
பார்த்துப்போக வந்தது

எதிர்பாராத சிவப்புக்கம்பள வரவேற்பு

வருக வருகவென வரவேற்றது
கொரோனா தொற்று

புதிதாய்ப் பிறந்த சித்திரைக்கோ புதிராய்
போக

தாமதமாய் புரிந்தது சிவப்பு கம்பள வரவேற்பு

செய்வதறியா மனம் கலங்கிய சித்திரை

இனி எப்பொழுதும் இப்படி ஒரு பிறப்பே வேண்டாம்

என வேண்டிக்கொண்டது

(சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்)

எழுதியவர் : நா.சேகர் (13-Apr-20, 1:29 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 938

மேலே