நண்பன் 👬

நண்பன் எனும் கதாநாயகனுக்கு🤼

பல கதைகளை என் வாழ்வுக்கு தந்த என் வாழ்க்கை நீயடா நண்பா....🤼

நிலவை போல நிறம் மாறி போறவன் அல்ல அவன் நட்சத்திரம் போல நிரந்தரமாய் என்னுடன் இருப்பவன்..🤼

காதல் தோல்வி எனும் கடலில் மூழ்கிய என்னை அவன் பாசமான பேச்சு என்னும் கப்பலில் கடத்தி செல்வான்...🤼

நான் பிறந்த போது என் கூட இருந்தானா என்று தெரியவில்லை ஆனால் நான் இறந்த பின் என் கடைசி சடங்கு வரை இருப்பான்...🤼

இருசக்கர வாகனத்தில் மூவராய் சென்று எமனுக்கு இம்சை கொடுத்திருக்கிறோம் நாங்கள்...🤼

என் காதல் என்னும் கோட்டைக்கு என்னுடைய சம்பளம் இல்லா காவலர்கள் என் நண்பர்கள்..🤼

பாட்டி கடையில் யாருக்கும் தெரியாத திருட்டு தம்முக்கு சொந்தக்காரர்கள் .....🤼

ஒரு தேவதையின் பின் காதல் என்னும் வரம் கேட்டு 10 பேரும் சுத்துவோம்.....🤼

பேருந்து நிலையத்தில் நின்று கல்லூரி தேவதைகளை வர்ணிப்பதில் எழுத்தாளர் வாலியை வென்று விடுவார்கள்....🤼

மதுவிற்கும் அசைவத்திற்கும் வாரத்தில் ஒரு நாள் வாழ்க்கை முழுவதற்கும் குத்தகைக்கு எடுத்துள்ளனர்......🤼

பெட்ரோலுக்கு பணம் இல்லை என்று பணம் வாங்கி பல்லைக் காட்டிய படி படம் பார்த்தவர்கள்....🤼

கல்வி தந்தையைப் போல் இதை படித்துக் கொள் இதுதான் இன்றைக்கு வரும் என்பான் எஜமானை போல......🤼

நட்பின் நடுவில் சிறந்த கோமாளி தலைவனாய் இருப்பான் என்னை போல....🤼

நண்பன் இருக்கும் தைரியத்தில் சகுனியிடம் சண்டைக்கு அழைப்பு மணி அடித்து விடுவான்......🤼

ஒரு உணவு பாத்திரத்தில் 9 கைகள் கதகளி ஆடும் என் நண்பர்களோடு...🤼

ஆசிரியர்களுக்கு எல்லாம் அழாத குறைதான் நாங்கள் கடுப்பேத்தும் கருடபுராண காட்சிகளை கண்டு....🤼

நட்பு அதுதானே எல்லாம் நாளை என்பது நிச்சயம் இல்லை ஆனால் என் நட்பு என்றும் நிச்சயம் இருக்கு என் உயிரின் உறவுகளாய் மாறிய என் நண்பனே.....🤼🤼🤼

நண்பேன்டா நண்பேன்டா.....🤼

எழுதியவர் : வினோத் குமார் (15-Apr-20, 5:35 pm)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 589

மேலே