இரை தேடிச் சென்ற பறவை

இரை தேடிச்
சென்ற பறவை
இடம் திரும்புது!
உயிர் காக்கும்
உள்ளம் நாடுது!

ஊர் ஊராய்
சென்றது,
இவர்தம்
ஒருவேளை
உணவெனும்
அமுதம் கண்டிட
தானே!

கால் கடுக்க
நெடுந் தூரம்
நடந்தே செல்ல
இவர்தாம்
கற்காலம்
சென்றனரோ?
ஆளும்
மனிதரெல்லாம்
இக்கொடுமை
காணீரோ?
இந்நிலை தான்
அறியாரோ?

உயிர் காக்க
தானே இங்கே
போராடுது!
அவசர நிலையும்
உடனடி அவசியம்
ஆனது!
இதில் இவர்
உயிரெல்லாம்
அடங்காதோ?

அரசு அன்றாடம்
அரிசிக்கு
அல்லாடும்,
மக்களின் நிலை
காக்க மேலும்
உதவிட வேண்டும்!
அறிவோடு,
கூடிய விழிப்புணர்வு
மக்கட்கு முக்கியமாய்
கூறிட வேண்டும்!

உயிர் காக்கும்
முகமூடி,
உள்ளங்கை
சுத்திகரிப்பு திரவம்,
நோய் பரிசோதனை
உபகரணம்,
தேவைக்கு
கிடைக்க
வழி செய்திட
வேண்டும்!

ஒன்றுபட்டதாலே
நம் தாய் நாடு!
ஒன்று கூடி,
ஒற்றுமையாய்
கொடும் உயிர்க்
கொல்லியை
துடைத்தெறிந்து,
மகிழ்ச்சி கடலில்
ஒலி எழுப்பி,
ஒளி ஏற்றி,
நம் வெற்றியை
கொண்டாடிட!!! 🙏

- ச.கி

எழுதியவர் : ச.கில்பர்ட் (ச.கி) (19-Apr-20, 1:23 am)
சேர்த்தது : ச கி
பார்வை : 4151

மேலே