கடவுள் சிரித்திருப்பார்
சொர்க்கம் - அன்போடு
உள்ள உங்கள்
தூய உள்ளம்!
நரகம் - அன்பில்லாமல்
உள்ள உங்கள்
அசுத்த உள்ளம்!
தேடுகிறோம்!
எங்கு எங்கோ
தேடுகிறோம்!
இறைவனை...
இதற்கெல்லாம்
கண்ணை குத்தும்
அளவிற்கு, கட்டுக்
கதைகள் வேறு!
சொர்க்கம், நரகம்
இவை எல்லாம்
நம் உள்ளம் தான்!
தோழரே!
இங்குள்ள
நம் வாழ்வு
மேலானது!
சொர்க்கத்தில்
வாழு! மாறாக
நரகத்தில் அல்ல!!
இறை என்பதாய்
கற்பிப்பதும்
இது தான்!
எப்போதும் இருப்பதை
விட்டு விட்டு,
பறப்பதை பிடிப்பது
தவிர்ப்போம்!!
இதில் இதற்காக
வேண்டுதல் வேறு!
இறைவனிடம் செல்ல...
இறைவன்
கண்டிப்பாக
சிரித்திருப்பார்!
நமது
சொர்க்கம் செல்லும்
வேண்டுதலின் போது!!! 😂
- ச.கி