இயற்கை- சில அழகு, சில வாசம்

காலைப்பொழுதினிலே ஆதவன்
அக்கினிக் கிரணங்கள் தீண்டும்முன்
நேரத்தில் சிறு நடை ஓர் உடற்பயிற்சியாய்
செய்து வரும் நான் - இன்று கொஞ்சம்
பாதை மாறி கட்டாய விடுமுறையில்
மூடி இருக்கும் என் பேரன் பள்ளி வழியே
நடைக்கட்ட .... என் மனதை ஈர்த்தது
அந்த இதுதானோ தேவலோக நறுமணம்
என்று நினைக்கவைத்த மெல்லிய மதுர வாசம்
எங்கிருந்து வரும் வாசம் என்று நான்
பள்ளியை நெருங்க..... அங்கு பள்ளி சுவரோரம்
பூத்துக் குலுங்கிய பவளமல்லி-- 'மனோரஞ்சிதம்
என்னை வரவேற்றது காலை வந்தனம் கூறி
ஆஹா என்ன அழகு எத்தனை அழகு
இந்த சிறிய மல்லிப்பூவில் ..... கொஞ்சம் அருகில் நான்
மல்லிமரத்தைத் தொட்டுவிட .... மரத்தில் நில்லாது
தலைகீழாய் உதிர்ந்ததன பூக்கள்....
எத்தனை வேகத்தில் விழுந்தனவோ அத்தனை வேகத்தில்
சுருங்க தொடங்கின ;;;;;; என் மனதில் ஓர் வேதனை
இந்த அழகைத் தொட்டது தவறா.... என்னுள் கேள்வி
சில அழகு தூரத்தில் பார்த்து ரசிக்கத்தான்
அதன் மனமும் ...... இப்போது மனதில் தெளிவு
மீண்டும் என் பாதையில் நான்
காலை சிறு நடைப்பயிற்சியில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Apr-20, 9:42 am)
பார்வை : 358

மேலே