வசந்தம் வருமோ
இலையுதிர்க் காலம்
கீழே விழுந்து காய்ந்த
சரகுகள் காற்றில் பறக்க
அவளை நினைத்து நான்
எழுதிய கவிதை ஏடுகள்
கைவிட்டு நழுவி காற்றில் பறக்க
வசந்த காலம் வருமா
நிலை மாறுமோ என்று
என்னையறியாமல் முணு முணுத்த
என் வாய்