விழிகளின் வழியே
விழிகளின் வழியே
=========================================ருத்ரா
போதிய விழிப்புணர்வு இல்லை
என்று சொல்லிக்கொண்டே வந்தாள்.
ஊடகங்கள் படுத்திய பாடு அது.
ஆமாம்.
"விழிப்புணர்வே" இல்லை.
என்ன சொல்கிறாய் ?
பின்னே என்ன?
நான் உன்னைப்பார்த்தால்
நீ எங்கோ வேண்டும் என்றே
அந்த மரக்கிளையில் வழக்கமாய்
ஒரு நொண்டிக்காக்கா வருமே
அதைப்போய் பார்க்கிறாய்.
நானும்
நீ என்னப்பார்க்கும் போது
ஆண்பிள்ளைத்தனமாய்
உன்னை எதிர் நோக்கி பார்க்காமல்
வேறு எங்கோ பார்க்கிறேன்.
ஆனால் அது சட்டென்று நீ
பார்வையைய வேறு எங்கும்
திருப்பிவிடக்கூடாதே என்று தான்..
"விழிப்புணர்வே" இல்லை.
என்ன கீறல் விழுந்த ரிக்கார்டாய்
பேத்திக்கொண்டே இருக்கிறாய்.
நானா? வள்ளுவனிடம் போய்க்கேள்
............................
"கண்ணொடு கண்ணிணை நோக்கின்.."
அது அப்படியா?
அவள் விழிகளில்
ஏழ்கடலும் ததும்பி வழிந்தன
காதலாய்!
இப்போது விழிகள் சங்கமித்துக்கொண்டன.
=========================================