சம்பா

மறைந்த சம்பாக்கள்!

அன்றையத்தமிழ் நாட்டில் மக்கள் வாய்க்கு ருசியான பதினெட்டு வகையான சம்பா
அரிசியை சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். இந்த சம்பாக்கள் எல்லாம் மாயமாய் மறைந்து
பவானி பொன்னி கண்ணகி அஞ்சுகம், ஐ ஆர் எட்டு ஐ ஆர் ஐம்பது சி ஃபார் சியில்
இன்னும் பல பல பேர் தெரியா அரிசிகள் பயிராகி மக்களை ஏமாற்றி வருகிறது.புதிய
கண்டுபிடிப்புகள்உடலுக்கு ஊறு விளை வித்து நோய் தரும் அரிசி களாகும்

1)0சீரகசம்பா
,2)சிருமணிசம்பா, ,
3)சின்னசம்பா ,
4)பெரியசம்பா ,
5:சன்னசம்பா ,
6)ஊசிச்சம்பா,
7)கிச்சடிச் சம்பா,
8)இலுப்பைப்பூ சம்பா ,
9)கைவளச் சம்பா ,
10)மல்லிகைச் சம்பா ,
11)கம்பன் சம்பா ,
12)குங்குமப்பூ சம்பா ,
13:குண்டஞ் சம்பா,
14)கோடைச்சம்பா
15)ஈர்க்குச் சம்பா ,
16)புனுகு சம்பா,
17)முதுச்சம்பா,
18)துய்யமல்லிகைச் சம்பா

மற்றவகை அரிசிகள்

1)மோறன்.
2)மாலன்
3:சீலன்.
4)செம்பிலிப்பிரியன்
5)பிசானம்.
6)மலைகுலுக்கி
7)காடை கழுத்தன்
8)செம்பாளை.
9)பூம்பாலை.
10)முட்டைக்கார்
11)கடப்புக்கார்
12)மோசனம் மக்கத்தை
13)பிச்சாவாரி
14)ஈசர்கோவை.
15)செந்நெல்
16)வெணநெல்

தேடியொரு சம்பாவை நாடிவாங்கக் கூடலை
நாடித்தின் றார்மக்கள் அன்றுருசி-- கேட்டிட
பாடிவைத்தார் சம்பாவை பாட்டிலே இன்றில்லை
தேடிக்காண் சம்பா வையும்

பாடின சம்பா பதினெட்டில் ஒன்றில்லை
ஓடியோடி ஆடிப் பட்டம் துறந்தார்
பேடியாய் வேண்டாமொன் பதுமாதப் பயிரென்றார்
அறுப்பேன் கதிரை மாதம் ஆறிலென்றார்
இருமாந்து கெட்டுக் கெடுத்தார் பயிர்தொழிலை
இன்றில்லை செந்நெல் வெண்நெல் அத்தனையும்
தமிழ்அழித் துமிப்பயி ரையும் அழித்தார்
தனித்து வாழவே விருப்பமாம்
தனிச்சோழர் சோறுடைத்த பெருமை குலைத்தாரே

எழுதியவர் : பழனிராஜன் (24-Apr-20, 10:29 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 201

மேலே