சமுதாயம்

மனிதர்களில் ஒருவனாம்
மகத்தான கடவுளாம் - ‍‍மருத்துவர்

தன்னலம் சிறிதுமின்றி
தன் உயிர் என்ற உணர்வுமின்றி
காலை மாலை என்ற நினைவுமின்றி
காப்பாற்ற வந்தானடி..

கலகம் சிறிதுமின்றி
கல்லறைக்கு அனுப்பினாயே
நல்லறம் சிறிதுமின்றி
நல்லடக்கம் செய்ய மறுத்தாயே

மனிதா போதுமடா உன் வேசம்
மனிதநேயமடா அவன் சுவாசம்

எழுதியவர் : ருக்குமணி நாகராஜ் (25-Apr-20, 2:03 pm)
சேர்த்தது : rukkumani
பார்வை : 550

மேலே