தூய்மை தொழிலாளர்களின் தியாகம்
வல்லூறு உரு கொண்டு
ஏளனங்களின் சிலுவையேற்று
தொன்றுதொட்டு ஈடிதம் ஈன்ற
காலணிகளையொப்ப
அனுதினமும் தனை அர்பித்தும்
துா்நாற்றத்தில் உழன்றும்
சுற்றத்தின் அவலம் நீக்கியும்
புறக்கணிக்கப்பட்ட நின் சமுதாயம்
உன் சேவைக்காக இரவல்
ஏந்துகிறோம்
இனங்காணப்பட்டது உன் தியாகம் இன்று
ஈமம் அடையும் வரை மறவோம்
.....
இது ஓர் சொல்லப்படாத பொழிப்புரை