உன் பார்வை
உன் பார்வை என்னுளத்தை தைத்தது
கூறிய அம்புபோல் ஆயின் தைத்த
இடத்தில் என் இதயத்தில் புண் ஏதுமிலாது
இதயத்தின் உள்ளே காதல் வடுவாய் நின்றுவிட
இதயத்தின் வெளியே அது பூமலர்தூவி
உதிர்ந்திட உதிர்ந்து ஒன்றாய் சேர்ந்தது
கா த ல் என்ற மூன்று அட்சர கோர்வையாய்
அகமும் புறமும் பேசும் உன் காதல் அம்படி
பெண்ணே உன் காந்தப் பார்வை