சாதாரண மனிதனாகவே
இழவு வீட்டின் ஒப்பாரி ஒலி
செவிகளுக்குள் பாயும்போது
இரக்கம்மில்லாமல் தன் வயிற்றுக்கு ஈயும்
ஒரு சராசரி சாதாரண மனிதனாகவே வாழ்ந்து சாகிறோம்
பசிப்போக்க எச்சில் இலை தேடும் ஜீவன்கள்
தொடர் மழைக்காலத்தில்
நடைபாதை வாசிகளின் இன்னல்கள்
என்னவென்று உணராமலே உண்டு உறங்குகிறோம்
ஒருநாளும் மகானாக வாழ நினைப்பதேயில்லை