தொலைந்து போகும்வரை

தொலைந்து போகும்வரை
========================================ருத்ரா

கண்ணொடு கண்ணினை நோக்கின்
வாய்ச்சொற்கள்
என்ன பயத்தும் இல.
ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கும்
முன்னாலேயே
வள்ளுவர் சொல்லிவிட்டார்.
இந்த முக கவசங்களினூடே
என்னத்தை
சள புள என்று பேசப்போகிறாய்?
பார்த்துக்கொண்டே இருப்போம்
இந்த கொரோனாக்கள்
தொலைந்து போகும் வரை!

==============================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (27-Apr-20, 7:03 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 294

மேலே