நட்பின் புரிதல்கள்
நம் இருவரின் நட்பு
மிகவும் புனிதமானது
என் கண்ணீரின் வாடை அறியும்
வல்லமை உன்னிடத்திலும்
உன் புன்னகையின் மெல்லிய ஒலி
கேட்கும் தன்மை என்னிடத்திலும்
இந்த அதிசயம் வரலாற்றில்
இடம் பிடிக்கும்போது
நம் நட்பின் சுவாசத்தை
காற்றோடு கலக்கவிட்டு
நாம் மண்ணோடு கலந்திருப்போம்..