71 இம்மைப்பற்று இல்லானே ஆசானுக்கு ஏற்றவன் - பொய்க்குருவின் தன்மை 7
கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நிரையசையில் தொடங்கினால் அடிக்கு 12 எழுத்து;
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
இகத்தின் வாழ்வினில் இச்சைய றான்றனை
சகத்தி னிற்குரு சாமியென் றோதுதல்
சுகத்தை நீங்கித் துயரஞ் செறிநரர்
அகத்தை வீடென்(று) அறைதல் சிவணுமே. 7
- பொய்க்குருவின் தன்மை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
”இவ்வுலக வாழ்வில் விருப்பத்தை விடாதவனை பேருலகில் ஆசிரியனாகக் கொள்வது, இன்பத்தை நீங்கி துன்பம் நிறைந்த மனிதனின் வீட்டைக் கடவுளின்ப நிலையமாகக் கொள்வதற்கு ஒப்பாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்..
இகம் – உலகம், பூமி (World, earth), சகம் – பேருலகம் (Universe),
அகம் - குடியிருக்கும் வீடு, வீடு - கடவுளின்பம். சிவணுதல் - பொருந்துதல்; ஒக்கும்.