அழகிய தருணங்கள்
அதிகாலை பனியுடன் கதிரவன் ஒளியும்..
கதகதப்பாய் புலரும் இனிய. காலையும்...
பசுமையான சோளக்காடும் வானம்பாடி கானமும்...
இவற்றை ரசிக்க நான் நிற்கும் மாடமும்...
தூரத்து மலையும் மறையாத நினைவுகளும்...
இளமஞ்சளாய் இதமாய் வரும் மதியமும்...
சிவப்பும் மஞ்சளுமாய் மாறும் மமாலையும்...
தரையருகே சிறகடித்து பறக்கும் கருங்குருவியும்...
எங்கிருந்தோ வந்த கார்முகில் கூட்டமும்...
எதிர்பாராமல் பெய்யும் வான்மழை சாரலும்...
எழிலுடன் நனைந்து சிரிக்கும் மலர்களும்...
எட்டிப்பார்க்கும் எப்போதும் அழகிய தருணங்களாய்!!!