அர்த்தமுள்ள புன்னகையில் அவள் பார்த்தாள்
பூக்களைப் பறிக்காதே என்று
எச்சரித்த பூந்தோட்டத்தில்
பூக்குடலையுடன் இவள் நுழைய
பொய்யுடன் நானும் நுழைந்தேன்
பூவிதழாளுக்கு மட்டும் நான் கவிதை பாட
ஏக்கத்தில் எதிர்பார்த்த மலர்கள் வாடி விழுந்தன
பார்த்து அதிசயித்து நின்றான் தோட்டக்காரன் !
பறிக்காத பறித்து பெண் சூடாத பாட்டுப் பெறாத பூக்கள்
ஏக்கத்தில் இற்று மண்ணில்தான் விழும் என்றேன்
அர்த்தமுள்ள புன்னகையில் அவள் பார்த்தாள்
இன்னுமொரு கவிதை தர மௌனப் பரிந்துரை போல் !