தாயும் சேயும்
அம்மாவிடம் சண்டையிட்டு கோபத்தில்
வீட்டை விட்டு வெளியே வந்தேன்
உச்சி வேலையில் சூரியன் உச்சதில் இருந்தான்
வெயிலுக்கு அஞ்சி வேலிமரத்தின் அடியில்
நிழலுக்கு ஒதுங்கினேன் அங்கு
தூளியில் தூங்கிக்கொண்டிருந்தது
இளங்குழந்தை
சுற்றும் முற்றும் பார்தேன்
சட்டென்று தென்பட்டது
ஒரு தாயின் முகம்
குழந்தைக்கு நிழல் கொடுத்துவிட்டு
தான் மட்டும் சிறகு உடைந்த பறவையாய்
வெயிலில் விறகு வெட்டிக்கொண்டிருந்தாள்
அவள் வெட்டி வீசியது விறகு மட்டும் இல்லை
என் வறட்டு பிடிவாதத்தையும்தான்
வீட்டிற்கு திரும்பி சென்றேன்
இல்லை இல்லை
திருந்தி சென்றேன்
அறிந்துகொண்டேன் தாய்மையை
புரிந்துகொண்டேன் அவள் மனதூய்மையை