பயணம் ஒன்று செய்வோம் வா

பெண்ணே!
வீசும் காற்றில் எங்கும்
காதல் விதைகள் நட்டு..
அவ்வேர்கள்
படர்ந்து செல்லும் இடமெல்லாம்..
சிறகில்லாமல் பறந்து
பயணம் ஒன்று செய்வோம் வா!
பயணிக்கும் நேரத்தில்
இருவருக்கும் களைப்பு ஏற்பட்டால்..
வானில் சுற்றி திரியும்
கலைந்த கார்மேகங்களை
கொஞ்சம் கடன்வாங்கி
இமைகள்மூடி
இதமாய் இளைப்பாறுவோம் வா!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (3-May-20, 3:01 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 376

மேலே