காமமில்லா இரவு
இருள் வரும் இரவு நேரங்களில்
சில சமயங்களில்
உடலோடு உடல் சேராமல்
கட்டில் மேல் காமம் இல்லாமல்
அவள் செய்யும்
குட்டி குட்டி குறும்புகளைக் கண்டு..
என் "ஆண்" என்ற ஆடையை
ஒரு ஓரமாய்
கழற்றி வைத்து விட்டு
அவளோடு நான் ஆனந்தமாய்
விளையாடி மகிழ்வேன்
ஒரு குழந்தை போல்!!!
❤️சேக் உதுமான் ❤️